யோகாசனம் செய்யும் முறையை படங்களுடன் விளக்கும் நுால். இதில், 108 ஆசனங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. யோகாசனங்கள் பற்றிய விளக்கத்துடன் துவங்குகிறது. ஆசனங்கள் செய்வதற்கு எப்படி ஆயத்தமாவது என்பது குறித்தும் விளக்கம் உள்ளது. ஆசனங்களை செய்யும் முறை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
உடலை துாய்மை செய்தல், சுவாசத்தை சுத்தம் செய்தல் போன்றவற்றுக்கான விளக்கங்களும், பயிற்சி செய்யும் முறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. முத்திரைகள் செய்யும் முறை, அவற்றுக்கான அவசியம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. நோய் தீர்க்கும் ஆசனங்கள் பற்றி தனியாக தரப்பட்டுள்ளது.
மொத்த ஆசனங்கள் பற்றிய விளக்கமும் தரப்பட்டுள்ளது. செய்முறைக்கான படங்கள் தெளிவாக உள்ளன. உடற்பயிற்சிக்கு வழிகாட்டும் நுால்.
– விநா