சிவானந்த லஹரி சுலோகங்களுக்கு சிறப்பான விளக்கம் தரும் நுால். சிவன் நாமங்களை எடுத்து, பரமாத்மாவை வழிபடுவதே சிவானந்த லஹரி என எடுத்துக் கூறுகிறது. சமஸ்கிருத மொழியில் உள்ள சுலோகங்களை அப்படியே தந்து தமிழில் விவரிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு சுலோகமும் சிவனின் பெருமையை நெகிழ்ச்சியோடு தருகிறது. ஐந்தெழுத்து மந்திரத்துக்கு எளிய விளக்கம் தந்து, அஞ்சாத வாழ்வுக்கு நற்றுணை நிற்கிறது. சிவபெருமானின் தோற்றச் சிறப்புகளை நெகிழ்ச்சியோடு பாடுகிறது. அதன் அருமையை அழகுற விவரிக்கிறது.
சிவனையன்றி வேறு வழிபாடு கனவிலும் புரியேன் என்ற உறுதியை தருகிறது. ஆதிசங்கரரின் ஆழ்ந்த ஆன்மநேயத்தை உணர்த்தும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு