ஆன்மிகம் வேறு,- தெய்வீகம் வேறு என்று விளக்கும் நுால். தெய்வம், கடவுள், இறை என்ற சொற்கள் வேறு வேறு பொருள் கொண்டவை என்று கூறுகிறது.
தமிழரின் திருக்கோவில்களே தமிழரின் கலைச்செல்வங்கள் என்று குறிப்பிடுகிறது. அவை கலைக்கருவூலம், பண்பாட்டு மையம் மற்றும் நாகரிகச் சின்னங்களாக விளங்குவதை விவரிக்கிறது. சமஸ்கிருத பண்பாட்டிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று கூறுகிறது. மத வழி மனிதர்களாகித் தமிழர் வாழ்வியல் நெறியை இழந்தனர் என்று குறிப்பிடுகிறது.
தமிழகத்தில் நடுகல் வழிபாடு பற்றி விளக்கப்பட்டுள்ளது. அறு சமயங்களின் இணைந்த கலப்பு மதமே இந்து மதம் எனப்படுகிறது. ஒட்டுமொத்த வழிபாட்டையும் ஏற்கலாம் என்று கூறப்பட்டுள்ள நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து