அம்மா, அப்பா, உறவு, குடும்பம் என்ற பொருள்களில் கவிதைகள் புனைந்து தொகுக்கப்பட்டுள்ள நுால். காமராஜர், கண்ணதாசன், பாரதியார், பாரதிதாசன், சிவாஜி என புகழ் பெற்றவர்களுக்கு பாமாலை சூட்டப்பட்டுள்ளது.
ராணி லட்சுமி பாய், சரோஜினி நாயுடு, விஜயலட்சுமி பண்டிட் என சாதனை மங்கைகளை பாடியுள்ளது. அஞ்சறைப்பெட்டி பாடலில் வெந்தயம், ஏலம், கடுகு, சீரகம், மிளகு என்ற ஐந்தும் நோய் தடுப்பானாக சுட்டுகிறது.
தாமதம் என்ற கவிதை நையாண்டி மட்டுமல்ல; அது முன்னேற்றத்தை தடுக்கும் என புரிய வைக்கிறது. தேர்வு எழுத செல்ல தாமதமானால், வெற்றிகரமாக வாழ முடியாது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் நண்பனும் பகைவன் ஆகிறான். மன்னித்தால் பகைவனும் நண்பன் போன்ற கருத்துகளை உடைய நுால்.
– சீத்தலைச் சாத்தன்