பரபரப்பான சம்பவங்களுடன் படைக்கப்பட்டுள்ள சிறுவர் நாவல். இரு சிறுவர்களின் நட்பையும், அவர்கள் காவல் துறைக்கு உதவுவதையும், ஆர்வத்தை துாண்டும் வகையில் சொல்கிறது.
சிறுவர் படிக்க ஏற்ற எளிய சொற்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு வாக்கியத்திலும் ஐந்து சொற்களுக்கு அதிகமாக இல்லை. சிறிய சிறிய சொற்றொடர்கள் ஆர்வமூட்டுகின்றன. சிறுவர் இலக்கியத்தில் புதிய முயற்சியாக உள்ளது. மலை அடிவாரத்தில் வாழும் சிறுவர்களின் வாழ்க்கை முறை, திருவிழா கொண்டாட்டம் கண் முன்னால் நிகழ்வதைப் போல் காட்டுகிறது.
பதினெட்டு அத்தியாயங்களில் அமைந்துள்ளது. உரிய படங்கள் இடம்பெற்றுள்ளன. கதையில் திடீர் திருப்பங்கள் நிறைந்துள்ளன. சிறுவர்களின் படிப்பார்வத்தை துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள நாவல்.
– வீரா