மகளிர் சமுதாய நிலை குறித்து கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். பெண்கள் பிரச்னைகளும், ஐக்கியமும், ஏழு அறங்கள், பெண் மொழி, பெண்களும் குழந்தைகளும், பெண்களின் பலவீனம் எது, பெண்கள் படைப்பில் பெண்கள் போன்ற, 26 தலைப்புகளில் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன.
ஆணாதிக்கம் நிறைந்த உலகில் பெண்களுக்கு தனி தடம் பதிக்கும் வகையில் உண்மையை உரக்கச் சொல்கிறது. சமுதாயம் பெண்களை ஒதுக்கி வைத்துள்ளது என்றும் பெண் ஒளிராமல் மனித மாண்பு மாட்சி பெறாது என எடுத்துரைக்கிறது. பாதிக்கப்பட்ட பெண், சுதந்திரத்துக்குப் பின் சட்டப்பூர்வமாக பல தீமைகளில் இருந்து விடுதலை பெற்றிருக்கிறாள் என எடுத்துரைக்கிறது. மகளிர் நிலையை படம் பிடிக்கும் நுால்.
– வி.விஷ்வா