வாழ்வில் கிடைத்த பட்டறிவையும், மறக்க இயலாத நினைவுகளையும் தன் வரலாறாக பதிவு செய்துள்ள நுால். இளமையில் வறுமை என்னும் தடைக் கற்களை உடைத்துள்ளது பற்றி தெரிவிக்கிறது.
பள்ளிப் படிப்பை தொடர ஊக்கமளித்த ஒவ்வொரு ஆசிரியரையும் நினைவு கூர்ந்துள்ளது. பள்ளி கால நினைவுகளின் பதிவு, குடும்ப உறவுகளின் சிக்கல்கள், உறவுகளின் கனிவு, கசப்புணர்வு பதிவாகியுள்ளது.
சமூகம் சார்ந்த சிந்தனையுடன், விறுவிறுப்பான புதினம் போலப் படிப்பவருக்கு ஆர்வம் மேலிடும். வாழ்க்கை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இல்லற தோழமையை சுயமாக அமைத்துக் கொண்டது, அதற்கு பேராசிரியர்கள் துணை நின்றது என பலவற்றையும் விவரிக்கிறது. பாரதி போற்றும் புதுமைப் பெண்ணை அடையாளம் காட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்