சிலப்பதிகாரக் கதையை புதின வடிவில் சொல்லும் புதுமை உடைய நுால். இலக்கியச் சுவை குறையாமல் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் அமைந்துள்ளது.
மங்கல நாண் தொன்மை சிறப்பு, மூதாதையர் ஆன்மா நிறைவடைய செய்யப்படும் சுமங்கலி வழிபாடுகளின் தொன் மரபுகள் ஆங்காங்கே சுட்டப்பட்டுள்ளன. இரு வகை கூத்து இசைக்கருவிகள் மரபும் விரிவாக தரப்பட்டுள்ளன.
கோவலன் – மாதவி ஊடலுக்கு வித்தான கானல் வரிகள் பற்றிய கருத்துக்கள் நெகிழ்வுடனும் விவரிக்கப்பட்டுள்ளன. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழு சுரங்களும் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. தற்கால இசை மரபோடும் ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளன.
சிலப்பதிகாரக் கதையை மரபு மாறாமல் தரும் புதினம்.
– புலவர் சு.மதியழகன்