நாடு விடுதலை பெறும் முன், காந்திஜி தலைமையில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் கிராமத்தில் நிகழ்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால்.
சாதி வேற்றுமை மறையாத காலம். தீர்த்தகிரி போன்ற நல்லவர்கள் வாழும் சூழல். அதன் இடையே நச்சுப்பயிரென பொறாமை குணம் கொண்டவர்களும், அடுத்தவரை கெடுக்க நினைப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர் என்பதை பாத்திரப் படைப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.
குடிப்பழக்கத்தின் தீமை, பொங்கல் விழா பண்பாட்டு சிந்தனை, கணவன் – மனைவி குடும்ப வாழ்வு குறித்த கருத்துக்கள் சிறப்படைய செய்து உள்ளன. அக்கால சூழலை அழகுற கட்டமைத்து. இக்காலத்துக்கு வேண்டிய சிந்தனைகளையும் தாங்கி எழுதப்பட்டுள்ள நாவல் நுால்.
– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்