ஏழாம் திருமுறை இயற்றிய சுந்தரரின் பிறப்பு, சிவத்தொண்டு, தடுத்தாட்கொள்ளப்படல், பதிகங்கள், திருமணம், வரலாற்றை விவரித்து, பாடல்களை சொல்லாய்வு செய்துள்ள நுால். சோழர் ஆட்சிக்காலம் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
பெரியபுராணத்தில் பல இடங்களில் சுந்தரர் வரலாற்றைச் சேக்கிழார் பாடிய தகவலும் தரப்பட்டுள்ளது. சைவ சமய பழமை, கொள்கை, பிற்கால வளர்ச்சி விளக்கப்பட்டுள்ளது.
சங்கம் மருவிய காலத்தில் சைவ, சமண சமய எழுச்சியும் வீழ்ச்சியும் தரப்பட்டுள்ளது. தென்னகத்தில் சமய வளர்ச்சி மீதான கருத்தோட்டமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுந்தரரைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள உதவும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு