உழைப்பால் உயர்ந்தவர் வாழ்க்கையை, கற்பனை கலந்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். நிஜமும், கற்பனையும் பாத்திரங்களாக வலம் வந்து சுவையூட்டுகிறது.
கடும் பஞ்சம் ஏற்பட்ட 19ம் நுாற்றாண்டில், 14 வயதில் ஸ்ரீவைகுண்டம் அருகே வசவப்பநேரி கிராமத்திலிருந்து புறப்பட்டு, அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் திருவனந்தபுரம் சென்று, உழைத்து முன்னேறியவர் வேம்பன். அவரே, மிட்டா கதையின் நாயகன்.
இவரது வாழ்க்கை சம்பவங்கள், மரணம் வரை அத்தனை வேகத்தில் செல்கின்றன. மரணத்தை, 15 நாட்களுக்கு முன்பே கணித்தார் என்பது உட்பட பல வியப்பு தகவல்கள் உள்ளன.
அந்த கால பழக்க வழக்கங்கள், சொல்லாடல்கள், ஆன்மிக சடங்குகள் பற்றிய ஆவணமாக புரிந்து கொள்ள முடிகிறது. அதுவே எழுத்தின் வெற்றியாக உள்ளது.
– ஜி.வி.ஆர்.,