ஹாக்கி விளையாட்டு பிரிவில் சாதித்த பெண்களை பற்றி அலசும் நுால்.
மொத்தம் 21 தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்திய மகளிர் ஹாக்கி அணியின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இந்த விளையாட்டில் சாதனை புரிந்த லக்ரா, சுஷிலா சானு, ரிது ராணி, நேகா கோயல், ரஜினி பற்றியும், அவர்கள் விடாமுயற்சி, பயிற்சி பற்றி அறிய தருகிறது.
ஆண்கள் ஹாக்கி மற்றும் சர்பிங் விளையாட்டு பற்றியும், சாதனையாளர்கள் பற்றியும் குறிப்பிட்டு உள்ளது. போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் இருந்து வந்து, இந்திய ஹாக்கி அணியில் சாதித்த பெண்களை உன்னதமாக பேசுகிறது. வாழ்க்கை பாதை, சாதனைகள் குறித்து மிகையின்றி எழுதப்பட்டுள்ளது. பெண்கள் சாதிக்க துாண்டுகோலாக இருக்கும் நுால்.
– வி.விஷ்வா