கருத்துக்களின் அணிவகுப்பாக மலர்ந்துள்ள புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். மரபின் கவித்துவத்தை உணர்ந்து, பாதை மாறாமல் படைக்கப்பட்டுள்ளன. வள்ளுவன், இளங்கோ, கம்பன் எனத் துவங்கி, வாழ்வு அறத்துடன் நெருக்கமாய் இருக்கின்றன.
நன்மை, தீமையை எடுத்துக்காட்டி நவீன மொழியில் படைக்கப்பட்ட அறக்களஞ்சியம். தவறுக்கு இடங்கொடேல், நிறை-குறை போன்றவை அறத்தின் உயர்வை எடுத்துரைக்கின்றன.
மழைநீர் தங்கும் ஏரி, குளங்களை ஒழித்ததை அறிந்து தான் மழையும் போக்கு காட்டுகிறது என எழுதப்பட்டுள்ளது. சமுதாயம் சார்ந்த பிரச்னைகளை எளிய மொழியில் எடுத்துச் சொல்கிறது. புதுக்கவிதைகள், பிடரியை சிலிர்த்து எழுந்து நிற்கின்றன.
– முகிலை ராசபாண்டியன்