சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.
சினிமா பாடலாசிரியராக இருக்கும் பள்ளிப்பருவ நண்பனை பார்க்க, சென்னை நகருக்கு செல்பவருடன் புத்தாண்டு கொண்டாட ஏற்பாடு நடக்கிறது. அந்த பாடலாசிரியர் விரும்பிய பெண்ணின் தற்போதைய கோலத்தை அறிந்து உதவுவது, மகிழ்ச்சியடைய வைப்பதாக ‘ஏந்திழையாள் பூந்துகிலாம்’ என்ற கதை முடிகிறது.
‘நிகழ்ந்தாய் முகிழ்ந்தேன்’ சிறுகதை சற்று மாறுபட்டது. திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் காதலை படம் பிடித்துக் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி நாட்களில் அனுபவித்த பழைய நினைவுகளை மீண்டும் அசை போடும் விதத்தில் ‘மகிழம்பூ’ சிறுகதை உள்ளது.
படிக்கத் துாண்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– முகில் குமரன்