சமூக நடப்புகளை புது கோணத்தில் பார்த்து, படைத்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். சகிப்பு, பிரிவுகளால் வாழ்க்கை வரையறுக்கப்படுவதாகக் கூறுகிறது. பெண்கள், ஆக்கவும், அழிக்கவும் வல்லமை பெற்றவர் என சூளுரைக்கிறது.
இலையில் காதலி எழுதி தரும் பெயர், அதை மரமாக கற்பனை கொள்ளும் காதலன் மனநிலையை கூறுகிறது. கண்ணாடி மீன்கள் யாருக்கு சொந்தம் என்பதாக கேள்வி கேட்கிறது.
காகத்தை வர்ணிப்பதில் அதன் வண்ணம், வெள்ளையாக மாறுவதை கற்பனைக்குள் கொண்டு செல்கிறது. வீட்டுச் செடிகள் பூச்செண்டாக மாறி வாழ்த்துவதை கூடி மகிழ்வதாக சொல்கிறது. பூனையின் சாது குணம் கவனிக்க வைக்கிறது. வாசிப்பை சுவாரசியப்படுத்தும் நுால். கவிதை எழுத முயற்சிப்போருக்கு உதவும்.
– டி.எஸ்.ராயன்