திரையில் அவ்வை, கவுந்தியடிகளை நடக்கவிட்ட கே.பி.சுந்தராம்பாள்; திருப்பதி திருமலை கோவில் நடை திறக்கும் போது ஒலிக்கும் சுப்ரபாதம் பாடிய எம்.எஸ்.சுப்புலட்சுமி; ‘பத்ம விபூஷண்’ பெற்ற முதல் பெண் நடனக்கலைஞர் பாலசரஸ்வதி என பெண்கள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால்.
வாழ்க்கை முழுமையையும் இசைக்காகவே அர்ப்பணித்த டி.கே.பட்டம்மாள்; நாதஸ்வரம் பொன்னுத்தாய்; தமிழில் முதல் பெண் நாவலாசிரியை வை.மு.கோதைநாயகி; தமிழகத்தின் முதல் கிறிஸ்துவப் பெண் அமைச்சர் லுார்தம்மாள் சைமன் சாதனைகள் எழுதப்பட்டுள்ளன.
விடுதலைக்காக போராட்டங்களில் சிறை சென்ற அன்னிபெசன்ட் உட்பட 60க்கும் மேற்பட்ட பெண் ஆளுமைகளை அறிய உதவும் நுால்.
– இளங்கோவன்