பிரெஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். கவிதையின் உட்பொருளை நன்கு உணர்ந்து படைக்கப்பட்டுள்ளது.
‘காற்றைக் கிழித்துச் சென்றது என் அம்பு; அப்புறம்தரையில் விழுந்தது அது. எங்கே என்று தெரியவில்லை; அவ்வளவு விரைவில் பார்வைக்கு சிக்காமலே...’ என்ற அமெரிக்கக் கவிதையில், கம்பரின் கவிநயத்தை காண முடிகிறது.
இயற்கை, வாழ்க்கை, காதல், கனவு, தனிமை, நட்பு என வகைப்படுத்தி தந்துள்ளது. தேவைப்படும் கவிதையை மட்டும் படிப்பதற்கான வசதியை காண முடிகிறது. உலகம் முழுதும் கவிதை மொழி எப்படி இருக்கிறது என்ற உள்ளடக்கம் எதை நோக்கி அமைகிறது என அறிந்து கொள்ள முடிகிறது. சிந்தனையின் ஜன்னலை திறந்து விடும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்