பழந்தமிழர் வரலாற்றை கூறும் சமூக நாவல். பாண்டிய நாட்டை ஆண்டு வந்தவர்களின் வீரத்தையும், வீழ்ச்சியையும் சொல்கிறது. அதை, 20ம் நுாற்றாண்டில், ஒரு இளைஞர் வழியாக மீட்டெடுப்பதாக மணி, அகிலா கதாபாத்திரங்கள் வாயிலாக நகர்கிறது.
ஆசிரியர் பயிற்சி பெற்ற இருவரும் காதல் திருமணம் செய்து, சுவடிகளை ஆய்வு மேற்கொள்கின்றனர். தேடலில் தமிழர் கலாசாரத்தை கண்டறிகின்றனர். அதில் ஒவ்வொரு ஆட்சியிலும், தமிழர்கள் அனுபவித்த இன்னல்களை பட்டியலிடுகின்றனர்.
ஆயுதம் தேடுவதாக குடிசையில் புகுந்து, ஓலைச்சுவடிகளை அள்ளி சாலையில் வீசும் ஆங்கிலேயரின் கோரம் பற்றி பேசுகிறது. சிலம்பக் கலையை படத்துடன் விளக்குவது சுவாரசியம். பாரம்பரிய கலைகளை நாவலில் விளக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்