திரையில் அவ்வையாரையும், கவுந்திஅடிகளையும் முன்னே நடக்கவிட்ட கே.பி.சுந்தராம்பாள்; திருப்பதி திருமலை கோவில் நடை திறக்கும் போது ஒலிக்கும் சுப்ரபாதம் பாடிய எம்.எஸ்.சுப்புலட்சுமி; ‘பத்மவிபூஷண்’ பெற்ற முதல் பெண் நடனக் கலைஞர் பாலசரஸ்வதி என பெண்கள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால்.
வாழ்வை இசைக்காக அர்ப்பணித்த டி.கே.பட்டம்மாள்; நாதஸ்வரம் பொன்னுத்தாய்; தமிழில் முதல் பெண் நாவலாசிரியை வை.மு.கோதை நாயகி; தமிழகத்தின் முதல் கிறிஸ்துவப் பெண் அமைச்சர் லுார்தம்மாள் சைமன் சாதனைகள் எழுதப்பட்டுள்ளது.
விடுதலைக்காகப் போராட்டத்தில் சிறை சென்ற 60க்கும் மேற்பட்ட பெண் ஆளுமைகளை அறிய உதவும் நுால்.
– இளங்கோவன்