வெண்பா இலக்கணப்படி அமைக்கப்பட்டுள்ள கவிதை நுால். நான்கு வரிகள் உடையது. ஒவ்வொரு தலைப்பிலும் உட்பிரிவுகளுடன் பாடல்கள் உள்ளன.
முதலில், தமிழின்பம் காண்கிறது. அதில் நற்றமிழ், அமிழ்தத் தமிழ், செந்தமிழ், குன்றா தமிழ், வெண்பா தமிழ், வீரத்தமிழ் என சொல்லிக் கொண்டே போகிறது. வாழ்வியலில் வழிமுறை என்ற கவிதையில் இவ்வுலகம் நல்லவர், கெட்டவரை உள்ளடக்கியது. அதில், யாருடன் சேர்கிறோமோ, அதை பொறுத்து குணநலன்கள் மாறுபடும் என, அழகாக தெரிவிக்கிறது.
அவசரத்தால் உருவாகும் அபஸ்வரத்தை தவிர்க்க, பூவை உவமையாக்கி பொறுமையை போதிக்கும் வகையில் கருத்தை வெளிப்படுத்துகிறது. அனைத்து கவிதைகளும் வெண்பா இலக்கிய நயத்துடன் கருத்துக்களை பகிர்கின்றன.
– வி.விஷ்வா