பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை காட்டியுள்ள சிறுகதைத் தொகுப்பு நுால்.
அறுவடை நேரத்தில், கிராமத்தில் நடக்கும் சம்பவம் மையக்கருத்தாக உள்ளது, ‘சூடு’ சிறுகதை. ஓட்டுக்கு பணம் வாங்குவது நியாயம் என நினைப்பதையும், ‘கல்’ சிறுகதை காட்டுகிறது.
ஓட்டு போட பணம் வாங்கிய பெண் தவிப்பையும் விவரிக்கிறது. ஏழைகளை துன்பம் பல வகையில் வாட்டுவது, ‘வெளிச்சம்’ கதையில் கூறப்பட்டுள்ளது. இதன் முடிவு மனதை கனக்க வைக்கிறது. சுவாரசியம் மிக்க சிறுகதைகள் உடைய நுால்.
– முகில் குமரன்