சிறுவர்களுக்கு அறத்தை உணர்த்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பாவேந்தர் பாரதிதாசன் படைத்துள்ள இரு சீர் ஆத்திசூடிகளில் சிலவற்றை கருவாக உடையது. பாவேந்தர் சிறுவர்களுக்காக உருவாக்கிய அறக் கருத்துகள் சிதையாமல் கதைகள் படைக்கப்பட்டுள்ளன. பாத்திரப் படைப்புகளும், அவை சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளன.
‘அழுபவன் கோழை’ துவங்கி, ‘நுால் பயில் நாடோறும்’ என்பது வரை, 10 சிறுகதைகள் உள்ளன. பாத்திரங்கள் உரையாடுவது போலவே பெரும்பாலும் உள்ள கதைகள் நகர்கின்றன. அதன் ஊடே கருத்தை சொல்கிறது. ஆர்வமூட்டும் உரையாடல்கள் சிறுவர்களை கவரும்.
கதைகளை சொல்லும் மொழி மிக எளிமையாக உள்ளது. இது, வாசிப்பை சுலபமாக்குகிறது. சிறுவர்களுக்கு அறம் சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– மதி