அம்பேத்கரின் படைப்புகளும், பணிகளும், நாட்டின் அரசியல், பொருளாதாரத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை எளிய நடையில் முன்வைக்கும் நுால்.
இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்து, வெளியிட்ட கருத்துகள் வியக்க வைக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பு, அன்னிய செலாவணி, தங்க நாணய மதிப்பால் விலைவாசியில் ஏற்படும் தாக்கத்தை எடுத்துக் காட்டிய விதம் குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் வேலை நேரம், விடுமுறை கால ஊதியம், இழப்பீட்டுத் தொகை, மகப்பேறு விடுப்பு, சலுகைகள் வழங்கும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொருளாதார ஆய்வாளர்கள் படிக்க வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு