மொழி, பெண்ணியம், கல்வி, ஊழல் மற்றும் சாதனை சான்றோர் போன்ற கருத்துகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழைப் பலவாறு போற்றி, ‘அது மூத்த மொழியாக இருந்தால் மட்டும் போதாது; ஆட்சி மொழி ஆக்குவது கடமை’ என குறிப்பிடுகிறார்.
பெருமிதமாய் வாழும் பெண்மையைப் போற்றுகிறார். சோம்பலின்றி வாழ்ந்தால் சுகம் விளையும் என்கிறார். எல்லாவற்றிலும் துாய்மையை எதிர்பார்ப்பதை பாராட்டலாம்.
ஊழலுக்கு எதிரான சகாயம், தமிழறிஞர் அலெக்சாண்டர் துபியான்சுகி, வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் செயல்திறன்களைப் பாராட்டி கவிதை இயற்றியுள்ளார். பொதுநலம் உடைய கருத்துகள் அடங்கியுள்ளன. மரபு பிறழாமல் எழுதப்பட்டுள்ள தொகுப்பு நுால்.
– ராம.குருநாதன்