வித்தியாசமான 16 சிறுகதைகளை உடைய நுால். ஒவ்வொன்றும் வித்தியாசமான நடை என்பது குறிப்பிடத்தக்கது.
சிலவற்றின் முடிவு மிகவும் வியப்பு தரும். மனித நேயத்தை காட்டுகிறது, ‘வால் பசங்க’ என்ற கதை. கூத்து, கும்மாளம் அடிக்கும் இளவட்டங்கள், ஆபத்து காலத்தில் ரத்த தானம் செய்வது மதிப்பு கூட்டுகிறது.
நாத்தனார் பற்றிய கதைகள் இரண்டு. உதவி செய்ய மாட்டார் என்று கருதியவர் எதிர்பார்க்காத விதத்தில் செயல்படுவது உச்சம். அழுக்கு அருவருப்புடன் பஸ்சில் ஏறியவனை அத்தனை பேரும் பயத்துடன் பார்த்தபோதும், வழிமறித்த யானைகளை விரட்டுவது மிக அற்புதம். அர்த்த புஷ்டியோடு அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்