தமிழ் இலக்கியத்தில் நவீன காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்துள்ள சிறுகதை தொகுப்பு நுால். சமூகம், மக்கள் மனநிலை, வாழ்வு சுழற்சி பற்றி பேசப்பட்டுள்ளது.
இந்த புத்தகம், 36 படைப்புகளை உடையது. அனைத்தும், 2000 முதல், 2020 வரை எழுதப்பட்டவை. இந்த காலக்கட்டத்தில் தீவிரமாக எழுதியவர்களின் படைப்புகள் இடம் பெற்று உள்ளன.
ஒவ்வொரு கதையும் நுட்பத்தால் வேறுபடுகிறது. மனித மன உலக சஞ்சாரம் மாறுபட்டுள்ளதைக் காட்டுகிறது. மாறிக்கொண்டிருக்கும் காலத்தின் சுழற்சி பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் நவீன இலக்கிய முகத்தைக் காட்டும் தொகுப்பாக மலர்ந்துள்ளது. எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.
– மலர்