மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்களை பகிர்ந்து, உரிய வகையில் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நுால்.
மாநிலங்களின் வளர்ச்சி தேவைகளுக்குத் தான் மத்திய அரசு இருக்க வேண்டுமே தவிர, மத்திய அரசின் தேவைக்கு மாநிலங்கள் இல்லை என்பதை மிக விரிவாக சுட்டிக்காட்டுகிறது. தேசியம், ஒருமைப்பாடு உணர்வு மீது உண்மையான நம்பிக்கை, பற்றுதலை மிக தெளிவாக வலியுறுத்துகிறது.
இந்தியா, பல மொழிகள் வழியாக, தேசிய இனம், மதங்கள், பண்பாடு-, கலாசாரத்திற்கு பன்முக உரிமையை இயற்கையிலே உடையது. இவை பாதுகாக்கப்பட வேண்டுமானால், மத்தியில் சமத்துவ கூட்டாட்சி, மாநிலங்களில் சுயாட்சி மலர வேண்டும் என வற்புறுத்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்