அனுபவ அடிப்படையிலான சிறுகதைகளின் தொகுப்பு நுால். உரையாடலில் உண்மை நிலையை உணர்த்துகிறது.
‘மாசறு’ என்ற கதை, குழந்தையின் மாசற்ற மனக்கோடுகள் ஓவியமாய் வெளிப்படுகிறது. அதற்குள் உலகம் உறைந்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம். பிறைசூடாப் பித்தி, வெள்ளை யானையும் குளிர்பதனப்பெட்டியும் என்ற பெயர்கள் சிந்திக்க வைக்கின்றன. இன்னொரு உலகத்திற்கு அழைத்து செல்கின்றன.
ஆடை இல்லாமல் இருக்கின்றோமோ என்ற உணர்வு குழப்பத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது. நிறைவாக தெளிவான புரிதலை தருகிறது. அக உணர்வுகளில் இருக்கும் துாய்மை வெளிப்படுகிறது. ஒவ்வொரு கதையும் சிந்திக்க துாண்டுகின்றன.
ஆழம் மிக்க சிறுகதை நுால்.
– முகிலை ராசபாண்டியன்