உடலை ஆராய்ந்து அறிய அறிவுறுத்தும் நுால். சித்தர்களின் அறிவுரைகள் குற்றம், மாயை நீக்கி இறைவனின் அம்சமாக்கும் என கூறுகிறது.
‘எல்லாவற்றிலும் கலந்து நிற்கிறோம்’ என்ற அத்வைத நிலை ஏற்பட்டால் மரண பயம் நீங்கும் என உரைக்கிறது. துன்பங்களுக்கு காரணமான அறியாமையை அழிக்க இறைவனை பணிய வேண்டும் என்கிறது. புலன்கள், கர்மேந்திரியங்கள், வாயுக்கள், அந்தகரணங்கள், தத்துவங்களின் செயல்பாடு பற்றி உரைக்கிறது.
திருமூலர், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர் பாடல்களின் பொருளை எளிய முறையில் தருகிறது. இதய பாதிப்பு தடுக்கும் வகையிலான செய்தியும் தரப்பட்டுள்ள நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து