தற்காப்பு கலையான தேக்வாண்டோவை, தக்க படங்களுடன் அறிமுகம் செய்யும் நுால். கலையின் ஒவ்வொரு நுட்பமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. புரிந்து கொள்ள ஏதுவாக படங்கள் அமைந்துள்ளன.
தேக்வாண்டோ தற்காப்பு கலையின் நுணுக்கங்கள் தனித்தனி தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. முதலில் உடற்பயிற்சியான ‘தண்டால்’ பற்றி விளக்குகிறது. அதன் ஒவ்வொரு நிலையும் உரிய படங்களுடன் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கலையின் ஒவ்வொரு அம்சங்களும் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு கலை பற்றி விளக்கிய பின், அதை பயிற்சி செய்யும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. தேக்வாண்டோ தற்காப்பு கலையை எளிதாக புரிந்து பயிற்சி பெற விளக்குகிறது. எளிய நடையில் அமைந்தது. பயிற்சிக்கு உதவும் நுால்.
– ராம்