சாதனை வாழ்க்கையை மேற்கோள் காட்டி நம்பிக்கை ஊட்டும் நுால்.
விடாமுயற்சி வெற்றிக்கு வழி போன்ற கருத்துகள் தரப்பட்டுள்ளன. சரியான அணுகுமுறையால் எதையும் அடைய முடியும் என நிகழ்வுகள் வழியாக விளக்குகிறது.
மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்கிறது முதல் பகுதி. நீராவி இன்ஜினை கண்டுபிடித்த ரிச்சர்ட், நாவலாசிரியர் அகதா கிறிஸ்டி, விற்பனையில் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் போன்றவை நம்பிக்கையை வலுவாக பற்றியுள்ளதை நிரல்படுத்துகிறது இரண்டாம் பகுதி.
நிறைவு பகுதியில் உள்ள சாதனையாளர் அறிவுரை, சுய முன்னேற்றத்திற்கு துாண்டுகோலாக அமையும். கடின சூழல்களில் மனமுடைந்து போகாமல் வெற்றிக்கு வழிகாட்டும் அறிவார்ந்த நுால்.
– புலவர் சு.மதியழகன்