மணமகளைத் தேடிய அனுபவத்தை சுவாரசியமாக பதிவிட்டுள்ள நுால்.
ஜாதகம் பார்த்து அலுத்த பெற்றோர் அனுபவ சோதிடர்களாக மாறியதை நகைச்சுவையுடன் கூறுகிறது. பரிகாரம் செய்தும் மணப்பெண் கிடைக்காத வருத்தமும் சுட்டப்பட்டுள்ளது. காலத்துக்கு ஏற்ப, ஜாதகத்தில் கட்டங்களை மாற்றினால் என்ன குற்றம் என்ற கேள்வியும் எழுப்புகிறது.
ஜாதக பொருத்தம் பார்த்தும் தோல்வியில் முடிந்த திருமண நிகழ்வுகளும் விவரிக்கப்பட்டுள்ளன. விவாகரத்துக்கான சில்லரை காரணங்கள், சமூக வலைதள விபரீதங்கள், பொருத்தம் பார்ப்பதில் ஏற்படும் கோளாறுகள், விருந்தில் வீணாகும் உணவுகள் என தத்ரூபமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. வரன் தேடுவோர் படிக்க வேண்டிய நுால்.
– புலவர் சு.மதியழகன்