மோட்சம் என்ற ஒரு நிலையை அடைந்தால், பிறவிகள் கிடையாது. ஆனால் அதை, நினைத்த மாத்திரத்தில் கைக்கொண்டு விட முடியாது. முதலில் நமக்கு பிறப்பு, இறப்பு கிடையாது என்பதை உணர வேண்டும்.
அழியாத ஆத்மா நாம் என்பதையும், நம் உடல், மனம் மற்றும் புலன்கள் யாவுமே, இந்த ஆத்மாவுக்காகவே சேவை செய்கின்றன என்பதையும் உணர வேண்டும். அதன் பிறகு மோட்சம் தான். இதற்கு இரண்டு நிலைப்படிகளை, கிருஷ்ணர் சொல்லித் தருகிறார். ஒன்று கர்ம யோகம், அடுத்த ஞான யோகம்.
இந்த பகவத் கீதைக்கு, ஆதி சங்கரர், வேதாந்தத்தின் அடிப்படையில் அத்வைத சித்தியை அடையும் வகையில், உரை எழுதி இருக்கிறார். அதன் வழியே, பேராசிரியர் க.மணி, தற்கால தமிழ் நடையில் உரை எழுதி இருப்பது, மிகவும் உகந்ததாகத் தென்படுகிறது.
– பானுமதி