கிராம வளர்ச்சியை வரலாற்று பின்னணியுடன் அலசி தகவல்களை பதிவு செய்துள்ள நுால். அன்றைய மற்றும் தற்போதைய நிலை ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.
அரியலுார் மாவட்டத்தில் உள்ள கொடுக்கூர் பற்றிய விபரங்களை தருகிறது. முதலில் மாவட்டம் பற்றிய தகவலுடன் துவங்குகிறது. தொடர்ந்து கொடுக்கூர் கிராமத்தின் இன்றைய நிலை, அப்போது இருந்த நிலை பற்றி தெளிவாக தருகிறது.
ஊராட்சியின் நிலை, பொருளாதாரம், வேளாண்மை, கல்வி நிலை, சுகாதார பிரச்னைகள், இறை வழிபாடு, பண்பாட்டு உண்மை பற்றி எல்லாம் கூறப்பட்டுள்ளது. உடையார்பாளையம் வட்டாரத்தில் பேசும் தமிழ் மொழியின் தன்மை பற்றி ஆய்வு ரீதியாக பதிவு உள்ளது. கிராம வளர்ச்சியை ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ள நுால்.
– மதி