மூன்றடிகளை உடைய, ‘ஹைக்கூ’ கவிதைகளின் தொகுப்பு நுால்.
ஹைக்கூ கவிதையின் தந்தை பாஷோவின் இயற்பெயர் மாச்சுவோ சுய்மான் முனிபியூசா. பாஷோ என்பது, ‘வாழை’ என்று பொருள் தரும். வாழையை மிகவும் நேசித்தார். இதைக் கருத்தில் வைத்து முதல் கவிதை அமைக்கப்பட்டுள்ளது.‘வேகமாய் ஓடியும் எவரும் கவனிப்பதில்லை விநாடி முள்’ என்று கடிகார முள் வெளிப்படுத்தும் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. வியர்வை கசியும் உழைப்பின் ஓட்டம் கூட கவனிக்கப்படவில்லை என சொல்கிறது.
‘பூக்கள் மிகும்போது கவனிக்க தவறுகிறோம் இலைகளை’ என்ற கவிதை வரி, ஏற்றிவிட்ட ஏணியை மறந்து விடும் நிலையை உணர்த்துகிறது. ஒவ்வொரு கவிதையும் ஆழமான சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
– வி.விஷ்வா