நாலாயிர திவ்விய பிரபந்தம் நுாலில் குறிப்பிட்ட சில பாடல்களைத் தேர்வு செய்து விளக்கம் தரும் நுால். தெய்வீகப் பாசுரங்களைத் தனித்தனியாக பதிவிட்டு விளக்கமும் தரப்பட்டுள்ளது.
நெகிழ்ச்சியுடன், 365 நாட்கள் ஓதிப் படிப்பதற்கென்று தேர்ந்தெடுத்த பாடல்கள் பரவசம் தருவதாக அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலின் கீழேயும் விளக்கம் தரப்பட்டுள்ளது. பாடல்களில் வரும் மஹாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசக் குறிப்புகளுக்கும் விளக்கம் கிடைக்கிறது.
வைணவத் தலங்களின் சிறப்புகளை விவரித்து, தொடர்புடைய பாசுரங்களைப் படிக்க வழி செய்கிறது. விளக்கங்கள் எளிய நடையில் அமைந்துள்ளன. சுருக்கமாக புரிய வைக்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு