பட்டினத்தார் பெயரில் இருவர் இருந்ததாகக் கூறும் நுால். ஒருவர் கி.பி., 12ம் நுாற்றாண்டிலும் மற்றவர், 16ம் நுாற்றாண்டிலும் வாழ்ந்ததாக சித்தரிக்கிறது.
அறிமுகம், வாழ்க்கை குறிப்பு என துவங்கி அவர்களின் படைப்புகளை பற்றியும் தருகிறது. கோயில் நான்மணிமாலை, திருவிடைமருதுார் மும்மணிக் கோவை, திருக்காளத்தி, கைலாயம் போன்ற தலைப்புகளில் அமைந்துள்ளது.
இருவரும் கையாண்டுள்ள தத்துவ கோட்பாடுகளையும் விளக்குகிறது. இரண்டு பாகங்களாக உள்ளது. முதல் பாகம் ஐந்து நுால்களைப் பற்றி கூறுகிறது; இரண்டாம் பாகம் பட்டினத்துப் பிள்ளையார் செய்த திருப்பாடல் திரட்டு பற்றி கூறுகிறது.
பட்டினத்தார் பற்றிய தகவல்களை அறிய உதவும் நுால்.
– வி.விஷ்வா