ராமாயணத்தில் அனுமனைப் போற்றும் வகையில் சுந்தர காண்டத்தைப் புதுக்கவிதை வடிவில் தரும் நுால். கடல் தாவு படலம் முதலாக, திருவடி தொழுத படலம் வரை, 15 அத்தியாயங்களை உடையது.
அனுமன், ராம துாதனாக இலங்கை சென்றது, அவன் காலங்கள் கடந்தும் அருள் புரியும் ஆற்றல் கொண்டவன். இந்த இரண்டு அடிப்படைகளில் மாறுபாடு இல்லாமல் தொடர்கிறது.
மகேந்திர மலையில் நின்றபடி, இலங்கைத் தீவை எட்டிப்பார்த்து செழிப்பைக் கண்டு கொள்கிறான் அனுமன். மகிழ்ச்சி ஆரவாரத்துடன் குதிக்கிறான்.
குதித்தபோது மலை பொடிந்தது. குகையிலிருந்த விலங்குகள் நசுங்கின என காட்சிப்படுத்தியுள்ளது. படிக்கும் போது இறகால் வருடுவது போன்ற இன்பம் ஏற்படுகிறது.
– முகிலை ராசபாண்டியன்