கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய முப்பெருங் காவியங்களை ஆராய்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தும் நுால். நான்கு தலைப்புகளில் விளக்கம் தருகிறது. கம்பனுக்கு இளையவன் என்றும், கவிதைக்குத் தந்தை என்றும் பாரதியைப் போற்றுகிறது.
பாஞ்சாலி சபதத்தின் கதை மாந்தர் வழியே, திரவுபதி சபதத்தை மறுவாசிப்பு செய்யத் துாண்டுகிறது. பாரதியாரின் கவிதை முழுவதையும் விளக்குகிறது. பாரதியை அச்சத்தின் பகைவன், அன்புக்குத் தோழன் என்று வருணிக்கிறது.
தமிழால் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. ஜாதி வேற்றுமையைத் தகர்த்திடும் பாரதியின் எண்ணத்தை அழகாக விளக்குகிறது. பாரதியாரின் கவிதைகளின் மறுவாசிப்பாக மலர்ந்துள்ள நுால்.
புலவர் ரா.நாராயணன்