பாலியல் தொல்லையில் இருந்து விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்தும் நுால். பல சீண்டல் கருத்துக்கள் தரப்பட்டுள்ளன.
பாலியல் சீண்டல்களால் சமூகத்துக்கு ஏற்படும் இழப்பு மற்றும் இழிவுகளை கதை போல் விவரிக்கிறது. சீண்டல் வடிவங்களையும், மனிதர்களின் குணாதிசயங்களையும் வெளிப்படுத்துகிறது. மனித கொடூர குணங்களை தோலுரித்து எச்சரிக்கிறது.
விழிப்புணர்வு செய்திகளுடன், விலகும் வழிமுறையையும் காட்டுகிறது. ஆண்களின் கீழ்மை எண்ணங்களை பகிர்கிறது. வக்கிரத்தை நீக்கும் வழிமுறைகளை உரைக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நம்பிக்கையூட்டி, எப்படி எல்லாம் எதிர்த்து நிற்க வேண்டும் என எடுத்துரைக்கும் நுால்.
– ராம்