ஆன்மிகத்தில் கணபதி வழிபாடு துவங்கி மலர்களால் பூசனை செய்யும் முறையைக் கூறும் நுால்.
ஆடல் வல்லான், ஆனை உரிச்ச தேவர், ஆனைக்காரப் பெருமானுக்கு அழகிய மாடக்கோவில், நீரால் விளக்கிட்ட நமிநந்தியடிகள், அறுவடைத் திருநாளில் ஆதவன் வழிபாடு, ஆரூர் ஆழித்தேர், சிவனாருக்கு உகந்த வில்வ தளம் போன்ற தலைப்புகளில் கருத்தை தெரிவிக்கிறது.
கணபதி கடவுளின் வடிவ ஓவியங்களுடன் விரிவான தகவல்களைத் தருகிறது. வேள்வி செய்து மழையைப் பெய்வித்தது குறித்த விபரங்களை தருகிறது. நடராஜர் உருவ தத்துவம், திருவொற்றியூர் தியாகராஜ பெருமானுக்கு எழுத்தறியும் பெருமான் என்ற பெயர் வந்த காரணத்தையும் கூறுகிறது.
ஒவ்வொரு கோவிலுக்கும் நேரில் விளக்கம் தருவது போல் அமைந்துள்ள நுால்.
– புலவர் ரா.நாராயணன்