திருக்குறளை ஒப்பியல் அணுகுமுறையில் ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள நுால்.
திருவள்ளுவரின் புலமைத்திறம், அறவியல், பேச்சுக் கலை, கல்வி, மேலாண்மை, அமைப்பியல், மானுடவியல், தொன்மவியல், உருக்காட்சி உளவியல் நோக்குகள், தத்துவம், சமூகப் பொருளாதாரம் என பன்முகப் பார்வையில் திருக்குறள் வைரத்தைப் பட்டை தீட்டி ஒளிரச் செய்துள்ளது.
பழந்தமிழகத்தில் பேச்சுக் கலை செல்வாக்கு பெற்றிருந்ததை கேள்வி, சொல்வன்மை, பயனில சொல்லாமை, இனியவை கூறல், அவையறிதல், அவையஞ்சாமை அதிகாரங்கள் காட்டுகின்றன. பண்பாடு, நடத்தை, உளவியல், மருத்துவ மானிடவியல் கோட்பாடுகள் காட்டப்பட்டுள்ளன. வள்ளுவரைப் பன்முக நோக்கில் ஒப்பிட்டு ஆராய்ந்து காட்டும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்