மார்க்சியம் என்பது சமூக விஞ்ஞானம் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட நுால்.
மார்க்சிஸ்டுகளுக்கு போராடத் தெரியும்; நாட்டை ஆழத்தெரியாது என்ற குரலுக்கு பதில் கூறுகிறது. தொழிலாளர் தத்துவம் தலையெடுக்க முடியாதா என்ற கேள்விக்கும் விடை சொல்கிறது.
விஞ்ஞானத்தை மாயை எனக் கூறி, கண்டுபிடிப்பு சாதனங்களை பயன்படுத்துவோரை தோலுரிக்கிறது. விஞ்ஞானத்திற்கு உட்பட்ட நவீனத்தை எந்த காலத்திலும் மார்க்சியர்கள் எதிர்ப்பதில்லை என்கிறது. கலையும், இலக்கியமும் மக்களின் சமூக மேம்பாட்டை மையப்படுத்தி இருக்க வேண்டும் என்கிறது.
சமூக அறிவியலே மார்க்சியம்; விஞ்ஞானத்தை போல் அது தோற்காது என எடுத்துரைக்கும் நுால்.
– -டி.எஸ்.ராயன்