இறைவனைச் சரணடைதல், முக்தி, உயிர், உடல், உலக தொடர்பு, வழிபடும் முறை போன்றவற்றை விளக்கும் நுால்.
பூசை செய்வதாலோ, புராணங்களைப் படிப்பதாலோ, தானம், தவம் செய்வதாலோ பயன்கள் வருவதில்லை. இறைவனைச் சரணாகதி அடைவதால் பெரும்பயன் பெறலாம் என வலியுறுத்துகிறது.
மெய்ப்பொருளை அறிந்தவர்களுக்கு ஆன்மாவே சிறந்த வழிகாட்டியாகி ஞானம் பயப்பதை விளக்குகிறது.
பொருள் மீது பற்று வைக்காமல் ஆன்மா மீது பற்று கொண்டு வாழ வலியுறுத்துகிறது. பஞ்சபூதங்களைப் போலவும், சந்திரன், சூரியன், மலைப்பாம்பு, கடல், தேனீ உட்பட 24 குருக்களைக் கொண்டு முக்தி பெற வழிகாட்டுகிறது. தியான முறை, சாங்கிய தத்துவத்தை விளங்கச் செய்கிறது. ஆன்மநேய சிந்தனையை வளர்க்க உதவும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு