பாரதியார் எழுதிய ஆக்கங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். பழைய இதழ்களில் இருந்து தேடி எடுத்து, கால வரிசைப்படி பதிப்பிக்கப்பட்டுள்ளது. அரிய செய்திகளை தாங்கியுள்ளது.
நுாலில், 144 தலைப்புகளில் ஆக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கவிதை, பாடல், சிறு குறிப்பு, கதைகள் என பாரதியார் அவ்வப்போது பத்திரிகையில் எழுதியவற்றை நகல் எடுத்து சேகரித்து உருவாக்கப்பட்டுள்ளது. சில செய்திகளுக்கு, பதிப்பாசிரியரால் அடிக்குறிப்பும் தரப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் பாரதியார் எழுதிய கடிதமும் உள்ளது.
பாரதி எழுதிய நுால் ஒன்று தென் ஆப்ரிக்காவில் வெளியிடப்பட்டதாக ஒரு குறிப்பும் உள்ளது. அந்த புத்தகத்தில் என்ன இருந்தது என்ற விபரமும் உள்ளது.
மகாகவி பாரதியின் மற்றொரு பரிணாமத்தை காட்டும் நுால்.
– மதி