மத்திய கிழக்கு பகுதியில் உள்ள துபாய் நகரை கண்முன் நிறுத்தும் பயணக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். வறண்ட பகுதியில் உள்ள நகரம் பற்றி பசுமையான செய்திகளை தருகிறது.
கொட்டிக் கிடக்கும் தகவல்களை, நிதானமாக கவனித்து அனுபவித்து எளிய நடையில் தருகிறது. பல செய்திகள் வியப்பு தருகின்றன. அங்கு வசிக்கும் தமிழர்களின் உதவும் மனப்பான்மை, விருந்தோம்பல், கடும் உழைப்பு, வாழ்க்கை முறையை பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளது.
துபாய் நகரை சுற்றியுள்ள இடங்களை பார்க்கும் ஆவலைத் துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பயணத்தின் போது நடந்த நிகழ்வு படங்கள் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளன. வறண்ட நாட்டில் பயணம் செய்தபோது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ள நுால்.
– ராம்