திருநங்கையின் வாழ்க்கை போராட்டங்களை விவரிக்கும் நாவல்.
கடவுளே ஆண் பாதி, பெண் பாதி என இருக்கும்போது, மனித குலத்தில் அவ்வாறு இருப்பவரை இழிவு நிலைக்கு தள்ளப்படுவது குறித்த கேள்விகளை எழுப்புகிறது. சாந்தினி, மாதவி, அர்ஜுன், வி.சுஹாசினி, சந்தோஷ் முக்கிய கதாபாத்திரங்கள். இந்த பெயரில் உலா வந்து லட்சியத்தை நோக்கி இட்டுச் செல்லும் கருவிகளாக திகழ்கின்றன.
திருநங்கை மாதவி, பிற மனிதர்களின் கிண்டல், கேலி பேச்சுகளுக்கு இடையில் வாழ்க்கை என்ற விளையாட்டு களத்தில் போராடுவதை விவரிக்கிறது. வள்ளுவரின் கோட்பாடான, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நிலையே சிறப்படைய வைக்கும் என எடுத்துக் காட்டுகிறது. வாழ்வுக்கு முன்மாதிரி நாவல்.
– வி.விஷ்வா