இயற்கை சூழல் சிதைக்கப்படுவதை வேதனையுடன் சித்தரிக்கும் நாவல் நுால்.
வட மாநிலத்தில் பணியாற்றியவரை தமிழகத்துக்கு மாறுதல் செய்கின்றனர். வன்மத்தால் இந்த செயல் நடக்கிறது. பிறந்து வளர்ந்த பகுதிக்கே வந்ததால், மாறுதல் பெற்றவர் மகிழ்கிறார்.
குழந்தை பருவத்தில் அடைந்த அனுபவ நினைவுகள் மனம் குளிர வைக்கின்றன. அதே நேரம் அந்த சூழல் சிதைந்து அழிந்து வருவதை கண்டு பொறுக்காமல் மனம் பொங்குகிறது. ஏரி, குளங்கள் சிதைந்து, இயற்கை அழிந்து வருவதை காண்கிறார். அவை வலியை தருகின்றன. இந்த நிலையில் இயலாமையை கைவிட்டு, நம்பிக்கையுடன், அழிந்தவற்றை மீட்க துணிவதை தெளிவாகக் காட்டுகிறது.
இயற்கை மீது கொண்டுள்ள விருப்பத்தை வெளிப்படுத்தும் விதமாக படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்.
– ராம்