போலி துறவியர், ஆன்மிகத்தைப் பயன்படுத்தி ஆசிரமங்கள் அமைத்து நடத்தும் அட்டூழியங்களை தோலுரிக்கும் நாவல் நுால்.
ஆசிரமத்தில் துறவியாகச் சேர்ந்த பேத்தியின் உயிருக்கு ஆபத்து என தாத்தா துடிப்பதுடன் துவங்குகிறது. காவல் துறையில் புகார் அளித்தும் பயனில்லை. பக்தர்களின் பேரன்பிற்குப் பாத்திரமான ஆசிரம நிர்வாகியை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலவில்லை.
முதல்வர் உதவியோடு துப்பறிவதில் திறமை வாய்ந்த அதிகாரி ரகசியமாக ஆசிரமத்தில் துறவியாக சேர்கிறார். அங்கு அடுத்தடுத்து நடந்த கொலைகள், அவற்றில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடும் பணி தொடர்கிறது.
விசாரணையில் உண்மை யோகிகள், துறவிகளையும் கண்டறிகிறார். துப்பறியும் திறத்தால் மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. விறுவிறுப்பான நாவல்.
-–- புலவர் சு.மதியழகன்