திருமுருகாற்றுப்படை போல துவங்கி, அய்யப்பன் பற்றி, ‘கலியுக இலக்கியம் யாமே’ என உரைக்கும் நுால். உயர்ந்த அத்வைத கொள்கையின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
அய்யப்ப பக்தர்கள் எப்படி விரதம் இருக்க வேண்டும், ஒவ்வொரு பொழுதும் மாலை சூடிய பக்தர்கள் எப்படி ஆடிப் பாடி இறைவனைத் தொழ வேண்டும் என்பதை அழகாக எடுத்துரைக்கிறது.
நோன்பு இருக்க வேண்டியதன் அவசியத்தை இசை நயத்துடன் எளிமையாகச் சொல்கிறது. சபரிமலைக்கு செல்லும் வழியில் நடைபெறும் பேட்டை துள்ளல் காட்சியை மிகவும் சுவாரசியமாகச் சொல்கிறது. ஹிந்து – முஸ்லிம் ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. அய்யப்ப பக்தர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ள நுால்.
– -வி.விஷ்வா